முச்சக்கரவண்டி சாரதிகள் பயணிகளிடம் அதிகளவு பணத்தினை அறவிடுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
எனவே முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்க தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இந் நிலைமைகளை தவிர்க்க உரிய அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரதத்தில் வருவோரிடம் முச்சக்கரவண்டி சாரதிகள் அநியாயமாக பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.