ஜப்பானில் 65 வயதிற்கும் அதிகமானோர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 36.25 மில்லியனை எட்டியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது
அந்நாட்டின் மொத்த சனத் தொகையில் 29.3 வீதம் முதியவர்கள் எனவும் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
உலகில் அதிகமானவர்கள் வாழும் நாடுகளில் முதியவர்களை அதிகம் கொண்ட 200 நாடுகளில் ஜப்பான் முதலிடத்தை பெற்றுள்ளது.
அதன்படி, அந்நாட்டின் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வைத்திய செலவுகள் அதிகரிப்பதுடன், அங்குள்ள ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.