முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் இந்தியா விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பல்வேறு முக்கிய சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த விஜயத்தின் போது எதிர்வரும் 27ஆம் திகதி இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவேந்தல் நிகழ்வில் உரை ஆற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஒரு வார கால இந்திய விஜயத்தின் போது, அந்நாட்டு புராதன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிடவுள்ளதுடன், முக்கிய இரகசிய அரசியல் சந்திப்புக்களிலும் அவர் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.