பங்களாதேஷில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடாத்தினர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்த நிலையில், அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளதுடன், போராட்டத்தின் போது நடைபெற்ற கொலைக்கு ஷேக் ஹசீனாதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை நாட்டுக்கு திருப்பி அனுப்ப இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு வாய்மொழியாக கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அத்தோடு, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசு ஷேக் ஹசினாவை மீட்டு விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.







