முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு 3 வருட சிறைதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
2015இல் தமது டிபெண்டர் வாகனத்தின் மூலம் இளைஞர்கள் சிலரை கடத்தி தாக்குதல் நடத்திய வழக்கிலேயே இந்த தீர்ப்பு ஹிருணிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான 18 குற்றச்சாட்டுகளின் கீழ் ஹிருணிக்கா குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெமட்டகொட பிரதேசத்தில் தமது டிபென்டர் காரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேகநபர்கள் குழுவிற்கு எதிராக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில்இ குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்கமையஇ அவருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.