(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையின் முப்படையினருக்கும் இஸ்ரேலில் பயிற்சிகளை விரிவுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புதுடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு உதவியாளர் கேணல் அவிஹாய் சஃப்ரானி, கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சின், பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளனர்.
இதன்போதே பாதுகாப்பு செயலாளர் குணரத்ன மற்றும் கேணல் சப்ரானி ஆகியோர், இலங்கை முப்படை வீரர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.