NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மூதூர் இருதயபுரத்தில் மதுபானசாலை திறப்புக்கு எதிராக போராட்டம்…!

மூதூர் இருதயபுரம் பிரதேசத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்டுள்ள மதுபானசாலையின் அனுமதியை உடனடியாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை ( 18 ) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது .

இந்த ஆர்ப்பாட்டம் மூதூர் மணிக்கூட்டுகோபுர சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு மூதூர் பிரதேச செயலகம் வரை நடைபாதையாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சர்வமத தலைவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், மற்றும் இருதயபுர பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மூதூர் பிரதேச செயலாளருக்கு பொதுமக்கள் சார்பாக மதுபானசாலையை மூடுமாறு வலியுறுத்தி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Share:

Related Articles