NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் தாயும் குழந்தைகளும் உயிரிழப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

றாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் விசேட வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய றாகமை வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர் 23 வாரங்கள் கருவுற்றிருந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 36 வயதான கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையின் அலட்சியத்தால் இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாக உயிரிழந்த பெண்ணின் கணவரர் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன், கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலையின் தவறினால் ஏற்பட்டதல்ல என றாகமை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரணவீர தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், குழாய் மூலம் பிரசவத்திற்காக கருப்பையில் கருமுட்டை பொருத்தி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சிகிச்சைகள் அரச வைத்தியசாலைகளில் செய்யப்படுவதில்லை. இவற்றை தனியார் வைத்தியசாலைகள் பல இலட்சம் ரூபாய் செலவழித்து செய்கின்றன. இதன்போது பல கருமுட்டைகளை பொருத்துகிறார்கள்.

குறைந்தபட்சம் ஒரு முட்டையாவது நன்றாகப் போகும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்யப்படுகிறது. எனினும், இந்த தாய்க்கு மூன்று முட்டைகளும் கருவுற்றிருந்தது. எவ்வாறாயினும், சுமார் 20 வாரங்களில், அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு றாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தாயையும் அவரது 3 காப்பாற்ற வைத்தியசாலையின் ஊழியர்கள் கடுமையாக போராடியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles