NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மூவர் அகதிகளாக இந்தியாவுக்கு !

இலங்கையில் இருந்து 03 பேர் இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட நூற்றுக்கு மேற்பட்டோர் படகு மூலம் கடல் மார்க்கமாகச் சென்று இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், இன்றையதினம் காலை மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த இருவர் உள்ளிட்ட 03 பேர் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனை ஐந்தாவது மணற்பரப்பில் தரையிறங்கியுள்ள நிலையில் ,அவர்களிடம் தமிழக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles