(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மெக்சிகோவின் குரேடாரே மாகாணம் எல்.மார்க்யூஸ் நகரில் உள்ள ஒரு புகையிரத கடவையை பயணிகள் பஸ் ஒன்று கடந்தபோது புகையிரதத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன், 17 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோவில் புகையிரத சமிஞ்சைகள் மற்றும் தடுப்பு பாதைகளில் குறைபாடுகள் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.