நிலநடுக்கம் ஏற்பட்டால், மக்கள் பெரும்பாலும் பயத்தில் தவறான செயல்களையே செய்கிறார்கள்.
ஆனால் போர்ச்சுகலில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் ஒரு மெய்நிகர் விளையாட்டை (virtual reality game) உருவாக்கியுள்ளது.
ஒரு நிலநடுக்கத்தை அது மெய்நிகரில் உருவாக்குகிறது.
அடிக்கடி நிலநடுக்கங்கள் நிகழும் இந்தோனேசியாவில் மாணவர்களை அப்படியொரு சூழ்நிலைக்குத் தயார்படுத்துவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
இந்த மெய்நிகர் விளையாட்டானது மிகவும் பயம் நிறைந்ததுடன், உண்மையிலேயே சிறப்பான ஒரு முயற்சி எனவும் கூறப்படுகின்றது.