NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை  படைத்த  வட மாகாண வீரர்கள் கௌரவிப்பு!

தேசிய ரீதியில் இடம்பெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை  படைத்த  வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (27) இரவு யாழ்.சுதுமலையில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக,  விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்  கலந்துகொண்டதுடன் , சிறப்பு விருந்தினராக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பசிந்து குணவர்தன கலந்து கொண்டார்.

அதேவேளை, யாழ்ப்பாண இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர்கள், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles