(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அநுராதபுரம் – குருநாகல் வீதியின் அம்பன்பொல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் மீது தனியார் பஸ் பின்னால் இருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் மேலும் 29 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று (09) கதுருவெலயிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று மன்னம்பிட்டிய கொட்டாலிய பாலத்திலிருந்து ஹந்தப்பன நீர்பாயும் கால்வாயில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.