NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மேலும் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மைக்ரோசொப்ட்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

உலகின் பெரும் நிறுவனங்கள் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், அந்தவரிசையில் மைக்ரோசொப்ட் நிறுவனமும் தகது பணியாளர்கள் மேலும் 1000 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.

மெட்டா, கூகுள், மைக்ரோசொஃப்ட் போன்ற பெரு நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த வாரத்தில் மேலும் 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிர்ச்சி அளித்துள்ளது.

இதில் பெரும்பாலும் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை குழுக்களில் பணி செய்து வந்த ஊழியர்கள் தான் அதிகம் என்று கூறப்படுகிறது.

இதுவரை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்த ஆதாரங்களை பார்க்கையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles