NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மொனராகலையில் குடிநீர் கிணற்றுக்குள் இறந்த பாம்பை வீசிய அவலம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மொனராகலை – மெதகம பிரதேசத்தில் குடும்பங்கள் குடிப்பதற்காக நீர் பெறும் கிணற்றில் பாம்பை கொன்று வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த செயலை செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால், நீரை வெளியேற்றிய போது இறந்த பாம்பு ஒன்று பைக்குள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் மெதகம வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் மெதகம பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதாபிமானமுள்ள சமூகத்தில் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share:

Related Articles