மொராக்கோவில் இந்நாட்டில் அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
7.0 ரிக்டராகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதோடு இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 296 பேர் உயிரிழந்தோடு மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ள நிலையில் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.