NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மோசமான முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள்!

மலேசியாவில் ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் வன்முறை, மோசமான தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், அவர்கள் அங்கு அடிப்படைத் தேவைகளை இழந்து சில சமயங்களில் சித்திரவதைக்கு உள்ளாக்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) தெரிவித்துள்ளது.

குறித்த தடுப்பு முகாமில் இருந்து வெளியேறியவர்களிடையே மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று (06) இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இதன்படி, 23 பேர் குறித்த மையங்களை அடக்குமுறை இடமாக அடையாளப்படுத்தியுள்ளதுடன், அங்கு அவர்கள் தினசரி தண்டனை மற்றும் அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், சூரியனை தம்மால் பார்க்க முடியாது எனவும், பல கைதிகள் அடித்து துன்புறுத்தப்படுவதனை தாம் கொண்டுள்ளதாகவும் அவர்கள் விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர்.

பிளாஸ்டிக் குழாய் அல்லது தடியால் அடித்தல், உதைத்தல், சுவரில் தொங்கவிடுதல், தனிமைப்படுத்தல், உணவு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles