யாழ். அச்சுவேலியில் இறந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக இருந்து வருவதாக அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத் தலைவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மாமியாரின் உடல் பஞ்சமியில் அடக்கம் செய்த பின்னர் வீட்டில் பேய் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறந்த பெண்ணின் வீட்டில் ஒவ்வொரு நாளும் மர்ம சத்தங்கள் கேட்பதும் வீட்டிற்குள் மண்ணை அள்ளித் தூவுவதும் ஜன்னல் கதவுகளை அடிப்பதும், புகை போன்ற உருவம் சத்தத்துடன் வருவது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனை வீட்டின் உரிமையாளர் தனது தொலைபேசியில் நடுநிசி 1.00 மணியளவில் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
எடுக்கப்பட்ட காணொளியில் வீட்டின் முற்றத்தில் இருக்கும் நாற்காலி பல்வேறு கோணங்களில் சுழற்சியும் ஆட வைத்தும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் தற்காலிகமாக வேறு வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.