NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் இராணுவ படையினர் வசமிருந்த 40 ஏக்கர் காணி விடுவிப்பு.!!

யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஒரு தொகுதி காணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத், யாழ் மாவட்ட செயலர் ம.பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

வசாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும், மாங்கொல்லை பகுதியில் 15 ஏக்கர் நிலங்களும், திக்கம் பகுதியில் ஐந்து ஏக்கர் காணி நிலமுமாக சுமார் 40 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டன.

Share:

Related Articles