NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் பாம்பு தீண்டி ஒருவர் பலி..!

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் பாம்பு தீண்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஐயாத்துரை செல்வமகிந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்ட சென்ற போது, அவரை புடையன் பாம்பு தீண்டியுள்ளது.அதனையடுத்து அவர் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்,

குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை (18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Share:

Related Articles