NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ்ப்பாணத்தில் இரு மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை – ஆய்வில் தகவல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களே இவ்வாறு போதைக்கு அடிமையாகி வரும் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 33 சிறுவர்கள் போதைப்பொருள் பாவனையாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கும் 8 பேர் ஐஸ் போதைப்பொருளுக்கும், 7 பேர் கஞ்சா போதைப்பொருளுக்கும் ஏனையவர்கள் போதை மாத்திரைகளுக்கும் அடிமையாகியுள்ளனர்.

அதேவேளை புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கும் அதிகளவான சிறுவர்கள் அடிமையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் கீழே தரப்பட்டுள்ள முகவரியையும், தொலைபேசி இலக்கத்தையும் தொடர்புகொள்ளலாம்.

Bureau of Rehabilitation

No: 462/2,Kaduwela Road,
Ganahena,
Battaramulla,
Sri Lanka.
Tel: +94 112883891
Tel: +94 112577457

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles