NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகள் போராட்டம்

அனைத்து வேலையில்லா பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று காலை இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக வேலையில்லாமல் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் பாதிப்புக்களை சுட்டிக்காட்டி தமக்கான வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஐனாதிபதிக்கு மகஜர் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். அதே போன்று இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல்வாதிகளுக்கும் அந்த மகஜரின் பிரதிகளை அனுப்பி வைக்க உள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடாத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Share:

Related Articles