NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் குழந்தையொன்று சந்தேகத்துக்கிடமான முறையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்து 45 நாட்களே ஆன குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய நிலையில் சில மணித்தியாலங்களுக்குப் பின்னர் குழந்தை மயக்கமுற்றதையடுத்து, குழந்தையை அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில் மரண விசாரணையை வலிகாமம் கிழக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரதி ஆ.ஜெயபாலசிங்கம் முன்னெடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுவதன் காரணமாக இன்று நடைபெறும் உடல் கூற்று பரிசோதனையின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உடல் கூற்று பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles