NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ் சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட தீர்மானம் !

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து புதிய அபிலாஷைகள் கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மத்தள விமான நிலையத்தின் செயற்பாடுகளை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான யோசனை நிதியமைச்சகத்தின் அவதானிப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Share:

Related Articles