NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ் – திருநெல்வேலி பகுதியில் மாணவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (08) இடம்பெற்றுள்ளது

யாழ்ப்பாணத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் நேற்றுமுன்தினம் (07) கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்குத்திரும்பிய நிலையில், அவருக்கும் தந்தைக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் நித்திரைக்கு சென்றனர்.அதன்பின்னர் நேற்று காலை 6.30 மணிக்கு பெற்றோர்இ மகனை தேடியவேளை அவரை காணவில்லை.

பின்பு வீட்டின் பின்புறம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share:

Related Articles