NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஒருவர் திடீர் மரணம்…!

யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 57 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக செல்வச்சந்நிதி ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த நபர் நேற்றைய தினம் (28) வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மயங்கி விழுந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles