யாழ்ப்பாணம் வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குருக்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலய மகோற்சவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆலய மகோற்சவத்தினை நடாத்திய குருக்களின் நெருங்கிய உறவு முறைக்காரர் ஒருவர் வெளிநாட்டில் காலமான நிலையில் அவர் மகோற்சவ திருவிழாக்களை நடாத்தியதாக குருக்களுடன் சிலர் முரண்பட்டுள்ளனர்.
இதன் போது இவர்களிடையே கைக்கலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , எதிராளிகளான மூவரையும் பொலிஸார் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
அவர்கள் விசாரணைக்கு செல்லாத காரணத்தால் , பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
குறித்த ஆலய குருக்கள் பரம்பரையினருக்கு இடையில் நீண்ட காலமாக ஆலயம் தொடர்பில் முரண்பாடு காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இது தொடர்பில் நீதிமன்றில் வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் ஆலய மகோற்சவம் ஆரம்பமாகி , கடந்த வியாழக்கிழமை தேர் திருவிழா இடம்பெற்று , நேற்றைய தினம் பூங்காவன திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.