யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட “யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்” எனும் ஆவணப்படத் திரையிடலும் சமகால சமூகப் போக்குகள் பற்றிய உரையாடலும் நேற்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இன்று (25.09.2024) புதன்கிழமை கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.
தாயகத்தின் உள்ளுர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு என்பவற்றை ஆவணப்படுத்துவதனூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இந்தத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் இணைச் செயலாளர் சி.சிவகஜன் தலைமையில் நடைபெற்ற குறித்த புதன் கால மாணவர் அரங்கானது மாணவர்களின் தனித்திறன் ஆற்றல்களை வெளிக்கொணருதல், சமூக, அரசியல், பண்பாட்டு, பொருண்மியம் சார்ந்து மாணவர்களின் சமூகம் சார் உரையாடலுக்கான வெளியாக வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமைகளில் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.