யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் முஸ்லீம் மாணவர்களின் வழிபாட்டுக்காக முஸ்லீம் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டது.
திறந்து வைக்கப்பட்டதைத்தொடர்ந்து விசேட தொழுகையும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா கலந்து கொண்டார்.குறித்த நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

