யுக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படையெடுப்பானது ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருவதில், கிழக்கு யுக்ரைன் பகுதியை ரஷ்யா கைப்பற்றி இருந்தது.
அப்பகுதிக்கு உட்பட்ட தொன்பாஸ் என்ற பகுதியில், வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக, ரஷ்ய நடிகையான போலினா மென்ஷிக் (வயது 40) என்பவர் மேடையில் நேரலை நிகழ்ச்சியொன்றை நடத்தி கொண்டு இருந்தபோது, யுக்ரைன் நடத்திய ரோக்கெட் தாக்குதலில் மேடையிலேயே நடிகை பொலினா பலியாகியுள்ளார். யுக்ரைனின் தாக்குதலை ரஷ்ய மற்றும் யுக்ரைன் என இரு தரப்பினரும் உறுதி செய்துள்ளனர்.
இதுபற்றி உயுக்ரைனின் ராணுவ தளபதி ரொபர்ட் புரோவ்தி சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், இந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதுடன், 100 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.