NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யூரோ கால்பந்து – நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஸ்பெயின்!

யூரோ கால்பந்து தொடரின் குழு ‘பி’ ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தி, தோல்வியின்றி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

மூன்று முறை சாம்பியனான (1964, 2008, 2012) ஸ்பெயின் 2008 முதல் குழுநிலையில் மூன்று போட்டிகளிலும் வென்றுள்ளது.

குரோஷியாவை 3-0 மற்றும் இத்தாலியை 1-0 என வீழ்த்தி ஒன்பது புள்ளிகளுடன் ஸ்பெயின் குழுவில் முதலிடம் பிடித்தது.

அல்பேனியா விளையாடிய மூன்று போட்டிகளில் ஒன்றை டிரா செய்து, மற்ற இரண்டில் தோல்வியடைந்து ஒரு புள்ளியைப் பெற்று போட்டியிலிருந்து வெளியேறியது.

முதன்முறையாக நாக் அவுட் சுற்றுக்குள் நுழையும் கனவு இம்முறையும் நிறைவேறவில்லை.

போட்டியின் 11வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு ஃபெரான் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார். இதனையடுத்து போட்டியை சமன் செய்ய அல்பேனியா வீரர்கள் இறுதிவரை முயன்றும் தோல்வியடைந்தனர்.

ஸ்பெயினிடம் அல்பேனியா தோல்வியடைந்ததால், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் இறுதிக் குழு ஆட்டத்திற்கு முன்னதாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதனிடையே, குரோஷியாவுடன் 1–1 என்ற கோல் கணக்கில் போட்டியை டிரா செய்த பின்னர், குழு ‘பி’ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியனான இத்தாலி நாக் அவுட்டுக்கு தகுதி பெற்றது.

அல்பேனியாவுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி, ஸ்பெயினுக்கு எதிராக தோல்வியடைந்தது.

மொத்தமாக 4 புள்ளிகளுடன் இத்தாலி குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. குரோஷியா இரண்டு புள்ளிகளுடன் போட்டியில் இருந்து வெளியேறியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 55வது நிமிடத்தில் லூகா மோட்ரிச் கோல் அடிக்க குரோஷியா முன்னிலை பெற்றது.

எனினும், ஆட்டம் முடிவடைய சில நிமிடங்களே இருந்த நிலையில் (90+8வது நிமிடம்) இத்தாலியின் மட்டியா ஜகாக்னி கோல் அடித்து ஸ்கோரை சமன் செய்தார்.

இதேவேளை, நாளைய தினம் நடைபெறும் குழு எஃப் போட்டியில் போர்த்துகல் அணி ஜோர்ஜியாவை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டியில் போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரான 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ நாளைய போட்டியில் விளையாடுகின்றார்.

அந்த அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் ரொனால்டோ ஒரு கோல் அடித்தால், அதிக வயதில் கோல் அடித்தவர் என்ற பெருமையை பெறுவார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles