ஜெர்மனி நாட்டில் யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தொடக்க சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள யூரோ 2024 கிண்ண கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இந்த போட்டியில் துவக்கம் முதலே கோல் அடிக்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர்.
எனினும், ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் இரண்டாவது பாதியில் எந்த அணி கோல் அடித்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் போராட்டத்தில் தீவிரம் காட்டினர்.
போட்டி முடிய ஐந்து நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், பெல்ஜியம் வீரர்களின் ஓன் கோல் காரணமாக பிரான்ஸ் அணி போட்டியில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முடியாததால், போட்டி முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஜூலை 5 ஆம் திகதி நடைபெறும் காலிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி போர்த்துக்கல் அணியை எதிர்கொள்கிறது.