NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரயில் சேவை தாமதம்

பல்லேவெல மற்றும் கனேகொட ரயில் நிலையங்களுக்கும் வெயங்கொட மற்றும் கம்பஹா ரயில் நிலையங்களுக்கும் இடையில் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது முகாமையாளர் என்.இந்திபொலகே தெரிவித்தார்.

இதேவேளை, சீரற்ற வானிலையுடன் பிரதான மார்க்கம், கரையோர மார்க்கம் மற்றும் புத்தளம் மார்க்கத்திலும் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில ரயில்கள் சேவைகள் தாமதமாக வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல ரயில் நிலையங்களுக்கு இடையில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles