வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை இன்று (13) சந்தித்துள்ளார்.
இந்நிலையில் இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் நேற்று (12) ரஷ்யாவுக்குச் சென்றிருந்தநிலையில் கிம்மின் ரஷ்ய பயணம் அமெரிக்கா உட்பட பல சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினை வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் இன்று சந்தித்துள்ளார்.
உக்ரைனின் போரை எதிர்கொள்ள வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களை கேட்டு புட்டின் நாடியதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அதனை உண்மையாக்கும் வகையில் இரு நாட்டுதலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.