NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரஷ்ய ஜனாதிபதி – வட கொரிய ஜனாதிபதி இடையே முக்கிய சந்திப்பு!

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யாவிற்கு விஜயம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து யுக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக வட கொரிய ஜனாதிபதி கிம் பியோங்யாங்கில் இருந்து கவச புகையிரதத்தில் ரஷ்யாவின் பசிபிக் கடற்கரையில் உள்ள விளாடிவோஸ்டாக் வரை பயணம் செய்வார். 

அங்கு அவர் ரஷ்ய ஜனாதிபதியை சந்திப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

யுக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் வட கொரியா அதிக ஆயுதங்களை வழங்கக்கூடும் என அமெரிக்கா முன்பு எச்சரித்து இருந்தது.

இரு நாடுகளுக்கும் இடையே ஆயுதப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னேறி வருவதால் அமெரிக்கா கவலையடைந்துள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் ஜான் கிர்பி ஒகஸ்ட் 30 ஆம் திகதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles