NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘ரஷ்ய பெண்கள் 8க்கு மேற்பட்ட குழந்தைகளை பிரசவிக்க வேண்டும்’ – புட்டின்

ரஷ்யாவில் பிறப்பு விகிதம் கடந்த 1990இல் இருந்து குறைந்து வருகிறது.

யுக்ரைனுக்கு எதிராக சுமார் இரண்டு வருட போரில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு ரஷ்ய பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பிரசவிக்க கொள்ள வேண்டும் எனவும், அடுத்த 10 முதல் 20 வருடங்களில் ரஷ்யாவின் மக்கள் தொகையை உயர்த்துவதுதான் முக்கிய இலக்கு என்றும் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் அதுபற்றி உரையாற்றுகையில், நம்முடைய பல இனத்தினர் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வலுவான பல தலைமுறை குடும்பங்களைக் கொண்ட பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றனர்.

ரஷ்ய குடும்பங்களில் ஏராளமான நம்முடைய பாட்டிகள், பாட்டியின் அம்மாக்கள் ஏழு, எட்டு மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டிருந்தனர் என்பது நினைவில் கொள்வோம்.

இந்த சிறந்த பாரம்பரியத்தை பாதுகாத்து புத்துயிர் பெறுவோம். பெரிய குடும்பங்கள் நடைமுறையாகவும், ரஷ்யாவின் அனைத்து மக்களுக்கும் ஒரு வாழ்க்கை முறையாகவும் வேண்டும். குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, அது ஒரு ஆன்மீக நிகழ்வு, ஒழுக்கத்தின் ஆதாரம்.

ரஷ்யாவின் மக்கள் தொகையைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரிப்பது வரவிருக்கும் தசாப்தங்களுக்கு மட்டுமல்ல. தலைமுறைகளுக்கும் கூட என்பதுதான் இலக்கு.

ரஷ்யாவின் மக்கள் தொகை 2023 ஜனவரில் முதலாம் திகதி கணக்கின்படி 14 கோடியே 64 இலட்சத்து 47 ஆயிரத்து 424 ஆகும். 1999ஆம் ஆண்டு புதின் பதவி ஏற்றபோது இருந்ததைவிட இது குறைவானதாகும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles