NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ராஜபக்ஷவின் பெயர் மீது செனல் 4க்கு வரலாற்றுக் கோபம் – நாமல் MP

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 ஊடகம் தயாரித்து வெளியிட்டுள்ள காணொளி நீக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

செனல் 4 வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான காணொளியை தயாரிப்பதில் நம்பகத்தன்மை இருக்குமானால் அது ஏன் நீக்கப்பட்டது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.“இந்த காணொளி பயங்கரவாதிகளை ஒழித்ததற்காக ராஜபக்ஷர்களை பழிவாங்கும் மற்றொரு முயற்சியாக இருக்கலாம்.

அல்லது ஒருவரின் அரசியல் நோக்கத்தை திருப்திபடுத்தும் முயற்சியாக இருக்கலாம்.2009ல் போரை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, எனது குடும்பத்தினர், எனது தந்தை மற்றும் ராஜபக்ஷவின் பெயர் மீது செனல் 4க்கு வரலாற்றுக் கோபம் உள்ளது.அவர்கள் ராஜபக்ஷக்களுக்கு எதிரான காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர்.

நான் செனல் 4 ஐ ஒரு ஊடக நிறுவனமாக பார்க்கவில்லை. காணொளி உற்பத்தி நிறுவனமாகவே பார்க்கின்றேன்” என்று அவர் கூறினார்.ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது எனவும், சம்பவத்தை அரசியலாக்குவது விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles