NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரோசி சேனநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பு மேயர் ரோசி சேனநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (08) முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

4 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாதமையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 19ஆம் திகதி முதல் மின்கட்டணம் செலுத்தாததால், 6 இலட்சம் ரூபாய்க்கு மேல் மின்சார சபைக்கு செலுத்த வேண்டும்.

அதன்படி நேற்று காலை முதல் மேயர் வீட்டின் மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து உள்ளுராட்சிமன்றங்களும் கலைக்கப்பட்ட நிலையில், கொழும்பு மேயர் அலுவலகமும் நீக்கப்பட்ட போதிலும், ரோசி சேனாநாயக்க தொடர்ந்தும் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles