NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரோபோ தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்திய இலங்கை மாணவர்களுக்கு பிளாட்டினம் மற்றும் தங்க விருதுகள்!

தாய்லாந்தில் இடம்பெற்ற “2024 சர்வதேச படைப்பாற்றல் மற்றும் புதுமை விருதுகள்” என்ற ரோபோ தொழில்நுட்ப போட்டியில் பங்குபற்றிய 6 மாணவர்கள் நேற்று திங்கட்கிழமை (29) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்த மாணவர்கள் கொழும்பிலுள்ள புர்ஹானி செரண்டிப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களாவர்.

இவர்கள்  ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற இறுதிப்போட்டியில் 25 நாடுகளுடன் போட்டியிட்டு  ரோபோ தொழில்நுட்ப  துறையில் அசாதாரணமான திறன்களை வெளிப்படுத்தி டைட்டானியம் விருதை (இரண்டாவது மிக உயர்ந்த) வென்றனர்.

சர்வதேச போட்டியில் நான்கு கண்டங்களைச் சேர்ந்த 441 அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 1,000 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் மூன்று மாணவர்கள், காட்டுத்தீயைக் கண்டறிந்து இடத்தை உடனடியாகத் தெரிவிக்கும் தீ விபத்து எச்சரிக்கை இயந்திரத்தை தயாரித்து பிளாட்டினம் விருதை வென்றுள்ளனர்.

மேலும், மூன்று மாவணவர்கள் கம்போடியாவில் உள்ள பாராகான் சர்வதேச பல்கலைக்கழகத்தில் 100 சதவீதம் இலவசமாக கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

அத்தோடு, மூன்று மாணவர்கள் கடலுக்குச் சென்று அங்கிருந்த கழிவுகளை அடையாளம் காணும் இயந்திரத்தை (ஓஷன் ஸ்வீப்பர்)  தயாரித்து தங்க விருதை வென்றுள்ளனர்.

இந்த வடிவமைப்பு மிகவும் சுவாரஸ்யமான தீர்வு Most Interesting Solution விருதையும் வென்றுள்ளது.

இவ்வாறானதொரு உலகளாவிய நிகழ்வில் இலங்கை தமது ரோபோ தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்தும் வகையில் போட்டியிட்டது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles