NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லைகா புரோடக்ஷன்ஸ் இலங்கையில் அங்குரார்பணம் ! (Photos)

லைகா நிறுவனம் தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தை இலங்கையில் அங்குரார்பணம் செய்துள்ளது.

இந்த அங்குரார்பண நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் லைகா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஷ்கரன் கலந்துகொண்டிருந்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ், இலங்கையில் நவீன திரைப்பட தயாரிப்பு வசதியை அமைத்துள்ளது.

அறிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை மாற்றுவதையும், உள்ளூர் திரைப்படத் துறையை மேம்படுத்தும் முயற்சியில் இலங்கையர்களுக்கு பயிற்சி அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டே லைகா புரோடக்ஷன்ஸ் ளுசடையமெய வை இலங்கையில் ஆரம்பித்துள்ளது.

உள்ளூர் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள திரைப்படத் துறையைச் சேர்ந்த நட்சத்திரங்களும் கலந்து கொண்ட பிரமாண்ட அங்குரார்பண நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்போது நிகழ்வில் உரையாற்றிய லைகா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஷ்கரன்,

Lyca Productions India, EAP Films and Theaters (Pvt) Ltd உடன் உடன் ஒரு மூலோபாய கூட்டுறவைக் கொண்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

மேலும், EAP குழுமம் திரைப்படத்துறையில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இலங்கையில் நவீன திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவுவதில், அவர்களுடன் இணைவதில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த அங்குரார்ப்பண நிகழ்வின் போது, இந்நிறுவனத்தின் முதல் திரைப்படம் குறித்த செய்தியும் இங்கு அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு லசித் யோக்கர் கிங் என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles