NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லைக்காவின் Jaffna Kings அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் T-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியும் கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக பெத்தும் நிஸங்க 36 ஓட்டங்களையும் மொஹமட் நவாஸ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், டில்ஷான் மதுஷங்க மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன, நுவான் துசார மற்றும்

சொயிப் மாலிக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 147 என்ற வெற்றி இலக்கை நோக்கி லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி 14.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக நிஷான் மதுஷ்க 46 ஓட்டங்களையும் ரஹமனுல்லா குர்பாஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணியின் பந்துவீச்சில் நஷிம் ஷா 2 விக்கெட்டுகளையும் மதீஷ பத்திரன மற்றும் லக்ஷான் சந்தகான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles