NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வடகொரியாவின் அச்சுறுத்தல்கள் பற்றி ஆராய முத்தரப்பு உச்சி மாநாடு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் எதிர்வரும் 18 ஆம் திகதி முத்தரப்பு உச்சிமாநாடு இடம்பெறவுள்ளது. 

இதில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதற்காக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த ஜி7 மாநாட்டின்போது முத்தரப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. 

எனினும் சர்வதேச நிகழ்வுகளுக்கு இடையே அல்லாமல் தனியாக நடைபெறும் முதல் உச்சி மாநாடு இதுவாகும். 

இந்த மாநாட்டில் வடகொரியாவில் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க முத்தரப்பு நாடுகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles