NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வட்டியில்ல கல்விக்கடன் திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்!

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 7,000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் 20 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு அதிகபட்சமாக 15 இலட்சம் ரூபா வரை ஐந்து பிரிவுகளின் கீழ் கடன் பெறலாம் எனவும், 18 உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles