பங்களதேஷில் இடம்பெறும் வன்முறை மற்றும் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்தது உள்ளிட்ட செயற்பாடுகளின் பின்னனியில் சீனா , பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பில் இந்திய உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவலின் பிரகாரம், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் சீனாவின் பாதுகாப்புத் துறை ஆகியவை பங்களாதேஷில் மாணவர் அமைப்புகளை தூண்டிவிட்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ஆதரவாக உள்ள ஷேக் ஹசீனாவுக்கு பதிலாக பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் பங்களதேஷின் தேசியவாத கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன.