ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களுக்கு இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக நிதி மற்றும் திட்டமிடல் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பில், இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை கூறியுள்ளார்.
இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்திற்கான திகதி நேற்று (25) மாலை நடைபெற்ற பாராளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்கமைய டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் அது நடைபெறவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான செலவு, கடன் சேவை மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.