(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் மாத்திரம் டெங்கு நோயினால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வருடம் மே மாதம் 28 ஆம் திகதி வரை 38,00க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் இந்த நாட்டில் டெங்கு நோயினால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வருடம் மே மாதம் 28 ஆம் திகதி வரை 38,000க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் டொக்டர் அனோஜா தீரசிங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இவ்வருடம் இதே காலப்பகுதியில் மாதாந்தம் 1000-1500 நோயாளர்கள் பதிவாகியுள்ளமை கடந்த 2017ஆம் ஆண்டு போன்று அதிக டெங்கு நோய்க்கு நாடு செல்வதற்கான ஆரம்ப அறிகுறியாகும் என வைத்தியர் அனோஜா தீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
38,000 டெங்கு நோயாளர்களைக் கொண்ட நாடாக அடுத்த பருவ மழைக்காலத்தை நாடு எதிர்நோக்கியுள்ளதாகவும் இது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.