NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச டீசல் வழங்க தீர்மானம்!

கடந்த ஒரு வருடத்தில் வறட்சி காரணமாக பயிர்கள் சேதமடைந்த 65,000 ஏக்கர் விவசாயிகளுக்கு பெரும்போகத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 17,000 ரூபா பெறுமதியான டீசலை இலவசமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

உர கொள்முதல் செய்ய அரசு வழங்கும் மானியம்  15,000 ரூபாவுடன் ஒரு ஹெக்டேருக்கு இழப்பீடாக ஒரு இலட்சம் ரூபாவுக்கு கூடுதலாக இந்த சலுகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

கடந்த பருவத்தில், இலங்கையில் உள்ள விவசாயிகளுக்கு சீன அரசாங்கம் 6.5 மில்லியன் லீற்றர் டீசலை இலவசமாக விநியோகித்ததுடன், பெருமளவிலான சிறுபோக நெல் விவசாயிகள் பெற்றுக்கொள்ள வராததால் 02 மில்லியன் லீற்றர் டீசல் மிச்சமாகியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles