வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஜனாதிபதிக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுதல், நிதி வழங்குதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.