(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
உலகின் உயரமான வலைப்பந்து வீராங்கனை என்ற பெருமையை பெற்ற இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் தேசிய வலைப்பந்து அணியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கின் ஊடாக அறிவித்துள்ள தர்ஜினி, வெளிநாடுகளில் நடைபெறும் வலைப்பந்து போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
தான் வெளியேறுவது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தர்ஜினி சிவலிங்கம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.