NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வவுனியாவில் அஸ்வெசும பயனாளிகளை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல்..!

அஸ்வெசும பயனாளிகளை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல் இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அரச நிவாரணங்களை நீண்ட காலத்திற்கு வழங்க முடியாது என்பதோடு கொடுப்பனவை பெறுகின்ற பயனாளர்களை சுய தொழில் முயற்சியாளர்களாக மாற்றியமைப்பது தொடர்பான வேலை திட்டத்தை தெளிவுபடுத்தும் விதமாக குறித்த கூட்டம் இன்று இடம்பெற்றது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டுறவு பிரதி அமைச்சரும்  வன்னி அபிவிருத்தி குழு தலைவருமான உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஷ்குமார் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக செயலாளர், வவுனியா மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் உட்பட பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் உட்பட அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Share:

Related Articles